ADDED : நவ 07, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
தேனி: சின்னமனுார் அருகே காமாட்சிபுரத்தில் அழகுமுத்து என்பவர் நடத்திய பட்டாசு கடையில் நேற்று (நவ.,6) இரவு தீவிபத்து ஏற்பட்டது.
இதில் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசு வெடித்து சேதமடைந்தன. 4 நேபாள தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதுபற்றி தீயணைப்பு துறையினர் கூறியதாவது: அழகுமுத்து 2 கடைகளுக்கு அனுமதி வாங்கிவிட்டு, கடை அருகே பிக்கப் வேனை பட்டாசு லோடுடன் நிறுத்தி உள்ளார். விதிமீறல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என தீயணைப்பு துறை சார்பில் போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது என்றார்.
