ADDED : அக் 08, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோவில் தெருவில் சேர்ந்தவர் எம்.கார்த்திக். மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்.
வத்தலக்குண்டில் மேளம் அடித்து விட்டு சம்பளம் ரூ.800 பெற்றுள்ளார். பரசுராமபுரத்திலிருந்து கெங்குவார்பட்டி செல்லும் ரோட்டில் நடந்து செல்லும் போது, கட்டக்காமன்பட்டியைச் சேர்ந்த அஜய், இவரது நண்பர்கள் சங்கர், கார்த்திக் ஆகியோர் கத்தியை காட்டி ரூ.800 யை வழிப்பறி செய்தனர்.
கார்த்திக் அலைபேசி உடைக்கப்பட்டது.
தேவதானப்பட்டி போலீசார் வழிப்பறி செய்த மூன்று பேரை தேடி வருகின்றனர். -