நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறில் ஹைரேஞ்ச் வர்த்தக சங்க இளைஞர் அணி,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 35ம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இளைஞர் அணி முன்னாள் தலைவர் அலிகுஞ்சு துவக்கி வைத்தார்.
இளைஞர் அணி தலைவர் அருண்லால், பொது செயலாளர் பொன்பிரதீப், பொருளாளர் மகாராஜா உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 872 பேருக்கு கண் பரிசோதனை நடந்தது. அதில் 162 பேருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்து தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 290 பேருக்கு கண் நோய்களுக்கு சிகிச்சை அளித்து இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டன.