/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டியில் பொழுது போக்கு மைதானத்தில் வசதிகளை அதிகரிக்கணும்: சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி அவசியம்
/
வீரபாண்டியில் பொழுது போக்கு மைதானத்தில் வசதிகளை அதிகரிக்கணும்: சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி அவசியம்
வீரபாண்டியில் பொழுது போக்கு மைதானத்தில் வசதிகளை அதிகரிக்கணும்: சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி அவசியம்
வீரபாண்டியில் பொழுது போக்கு மைதானத்தில் வசதிகளை அதிகரிக்கணும்: சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி அவசியம்
ADDED : ஏப் 22, 2025 06:41 AM

தேனி: ‛‛வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பொழுது போக்கு அம்சங்கள் செயல்படும் பொழுது போக்கும் பூங்காவில் பொது மக்களுக்களுக்கு சுத்தமான கழிப்பறைகள், ஹைமாஸ் விளக்குகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும்.'' என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா மே 6ல் துவங்கி மே 14 வரை நடக்க உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவில் பக்தர்களின் அடிப்படை வசதிகள் போதுமானதாக இருப்பது இல்லை. குடிநீர், கழிப்பிடம், நெரிசல் இல்லாத நடைபாதை ஆகியவை முறையாக இருப்பது இல்லை. நடுரோட்டில் கடை, நடைபாதையில் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் பக்தர்கள் சிரம் ஆண்டுதோறும் தொடர்கிறது. திருவிழாவிற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் பக்தர்களுககான அடிப்படை வசதி மேற்கொள்ளும் பணிகள் இன்னும் துவங்க வில்லை.
பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவைவிழாவின் பொழுது போக்கு அம்சங்கங்ளான ராட்டினம், விளையாட்டு, கடைகள் ஆகியவை ஏழு ஏக்கரில் பொழுது போக்கு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள், பெண்கள் பாதுகாப்பாக வந்து செல்ல, கூடுதல் ஹைமாஸ் விளக்குகள் அதிகமாக அமைக்க வேண்டும். இப் பகுதிக்கு வருவோர் உள்ளே செல்லவும், வெளியேறுவதற்கும் தனித்தனி பாதைகளை அகலமாக அமைக்க வேண்டும். பெண்கள், ஆண்கள் கழிப்பறைகள், 'பயோ டாய்லெட்' வாகனங்களையும் கூடுதலாக அமைக்க வேண்டும்
வீரபாண்டி கம்பம் ரோட்டில் தெற்கு பகுதியில் பஸ் ஸ்டாண்ட், உப்புக்கோட்டை விலக்கு பகுதியில் வீரபாண்டி ரோட்டில் ஒரு பஸ் ஸ்டாண்ட் என 2 அமைக்கப்படும். அப்பணிகளும் இன்னும் துவங்கப்பட வில்லை. முல்லைப் பெரியாற்றில் பக்தர்கள் குளித்துவிட்டு செல்லும் ஆடைகளை சேகரிக்க புதிய ஏற்பாடுகளை செய்து ஆறு மாசடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருவிழா பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை சான்று பெற்ற ஒட்டல்கள், திண்பண்ட கடைகளை செயல்படுத்த வேண்டும். சுகாதாரம், பாதுகாப்பு, பார்க்கிங் வசதி பக்தர்கள் வசதிக்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்திட பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.