/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில எல்லைகளை தேனி கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கும் வசதி கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவக்கம்

ADDED : மார் 12, 2024 11:56 PM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் லோக்சபா தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறை பயன்பாட்டிற்கு வந்தது. தேர்தலையொட்டி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன் பல்வேறு ஆயுத்த பணிகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டிற்கு வந்தது. இந்த அறையில் பொதுமக்கள் புகார்கள், சி-விஜில் புகார்கள் பெறப்படஉள்ளன. அப்புகார்கள் மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.
மேலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிலைக்குழு, பறக்கும் படை, வீடியோ பதிவேற்றும்குழு ஆகியோருக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலின் போது தமிழகம் ,கேரள மாநில எல்லை வழியாக பணம், பரிசு பொருட்கள் பரிமாற்றத்தை தடுக்கவும், இரட்டை வாக்குப்பதிவை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளியில் தேர்தல் பிரிவு சார்பாக அதிநவீன கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இயக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இவை தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் முழுமையாக செயல்பட துவங்கும். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக 8 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்கள் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை புரிவோர், வளாகத்தில் செயல்பாடுகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட உள்ளன.
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா.