தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தொழில் போட்டியால் கொட்டகைக்கு தீ

தொழில் போட்டியால் கொட்டகைக்கு தீ

தொழில் போட்டியால் கொட்டகைக்கு தீ


UPDATED : நவ 23, 2026 07:16 PM

ADDED : நவ 23, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 07:16 PM ADDED : நவ 23, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி 27.

மைக்செட் அமைக்கும் தொழில் செய்கிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கலமணி. இவரும் அதே தொழிலைச் செய்து வருகிறார்.இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக கடந்த மாதம் பிரச்னை ஏற்பட்டது. தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் கார்த்திக் தரப்பினர், வெங்கலமணி மீது புகார் கொடுத்தனர். இதனை வாபஸ் பெறக்கூறி வெங்கலமணி, இவரது உறவினர்கள் செல்வம், கோபி,ஜெயகுமார், உதயகுமார், பாலமுருகன் உட்பட 6 பேர், கார்த்திக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்து நேற்று முன்தினம் அவரது மைக்செட் கொட்டகைக்கு தீ வைத்தனர். அக்கம் பக்கத்தினர், பெரியகுளம் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். சேத மதிப்பு ரூ.80,000. கார்த்தி புகாரில் தென்கரை போலீசார் வெங்கலமணி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us