தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மக்காச்சோளத்திற்கு டிச.,30க்குள் காப்பீடு

மக்காச்சோளத்திற்கு டிச.,30க்குள் காப்பீடு

மக்காச்சோளத்திற்கு டிச.,30க்குள் காப்பீடு


UPDATED : நவ 23, 2026 07:16 PM

ADDED : நவ 23, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 07:16 PM ADDED : நவ 23, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: மக்காசோளத்திற்கு டிச.,30க்குள் காப்பீடு செய்யலாம் என வேளாண் இணை இயக்குனர் வளர்மதி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கண்டமனுார், கோடங்கிபட்டி, தென்கரை, தேனி, கொடுவிலார்பட்டி, தேவாரம் ஆகிய 7 பிர்க்காக்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். இதில் ஒரு எக்டேருக்கு காப்பீட்டுத்தொகை ரூ.82,251 ஆகும். இதற்கு பிரீமியம் தொகையாக ரூ.1233.77 யை டிச., 30க்குள் செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட பிர்க்காக்களை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளத்திற்கு காப்பீடு செய்ய ஆதார், ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண், பட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ளவேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகலாம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us