தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/நுாலகங்களில் போலி புத்தகங்கள் பிரிப்பு

நுாலகங்களில் போலி புத்தகங்கள் பிரிப்பு

நுாலகங்களில் போலி புத்தகங்கள் பிரிப்பு


UPDATED : நவ 11, 2026 05:17 PM

ADDED : நவ 11, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 05:17 PM ADDED : நவ 11, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: மாவட்டத்தில் உள்ள நுாலகங்களுக்கு ‘அகல்விளக்கு ’ பதிப்பகத்தில் இருந்து வந்த புத்தகங்களை பிரித்து எடுக்கும் பணிகள் துவங்கி உள்ளன.

கோவையில் ஈ.வெ.ரா., பெயரில் துவங்கப்பட்ட நுாலகத்தில் பல்வேறு போலி நுால்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த புத்தகங்கள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எழுதப்பட்டதும், அதிக எழுத்துப்பிழைகள், தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் அந்த புத்தகங்கள் ‘அகல்விளக்கு’ பதிப்பகம் உள்ளிட்ட சில பதிப்பகங்களில் இருந்து வந்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் 2025–26ம் ஆண்டிற்கான புதிய புத்தகங்கள் கடந்த ஜூலையில் வந்தன. புதிய புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள 122 நுாலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் போலி புத்தக பிரச்னை வெளி வந்ததால் ‘அகல்விளக்கு’ பதிப்பக புத்தகங்களை பிரித்தெடுக்கும் பணி நுாலகங்களில் துவங்கி உள்ளது. நுாலகத்துறையினர் கூறுகையில்,‘ மாவட்டத்திற்கு அகல் விளக்கு பதிப்பக நுால்கள் 2400 வந்துள்ளன. அவற்றை தனியாக பிரித்து வைக்க அறிவுத்தி உள்ளோம். உத்தரவு வந்த பின் அவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளோம்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us