/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடுமிபிடி சண்டை: 6 பெண்கள் மீது வழக்கு
/
குடுமிபிடி சண்டை: 6 பெண்கள் மீது வழக்கு
ADDED : நவ 28, 2024 05:54 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் வீடு வாங்கும் பிரச்னையில் குடுமிபிடி சண்டையிட்டவர்கள் மீது வடகரை போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனி சுந்தர்ராஜ் நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி ரம்யா 31. அதே பகுதியைச் சேர்ந்த விஜயகணேஷ் மனைவி சுஜிதா 36. சுஜிதா வீடு விற்பனைக்கு வருவதாக தெரிந்து அவரது வீட்டை விலைக்கு வாங்க ரம்யா ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். ஆனால் சுஜிதா ஒப்பந்தப்படி வீட்டினை கிரயம் முடித்து தாராமல் தாமதப்படுத்தியுள்ளார்.
ரம்யாவும், இவரது மாமியார் பொன்னுத்தாய் பணம் கேட்டு சென்றபோது இருவரையும், சுஜிதா, இவரது தாயார் பேச்சியம்மாள், தங்கை உஷா ஆகியோர் தாக்கி செருப்பால் அடித்துள்ளனர். வடகரை போலீசார் சுஜிதா உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சுஜிதா புகாரில், கிரைய ஒப்பந்தப்படி வீட்டினை விற்பதற்கு புரோக்கர் மூலம் ரூ.10 லட்சம் அட்வான்ஸ் பெற்றாகவும்,கிரை உடன்படிக்கை காலம் முடிந்தது.
ரம்யா இவரது மாமியார் பொன்னுத்தாய், தாயார் மூன்று பேரும் வீட்டில் நுழைந்து, வீட்டினை கிரையம் முடித்து தரக்கோரி தன்னையும், தனது தாயார் பேச்சியம்மாளை தாக்கி செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர் என புகார் தெரிவித்தார்.
வடகரை போலீசார் ரம்யா உட்பட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.