/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளை நிலங்களில் சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள்.... அச்சம் : ஆடு,கன்றுக்குட்டி, நாய்களை கொன்றதால் பீதி
/
விளை நிலங்களில் சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள்.... அச்சம் : ஆடு,கன்றுக்குட்டி, நாய்களை கொன்றதால் பீதி
விளை நிலங்களில் சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள்.... அச்சம் : ஆடு,கன்றுக்குட்டி, நாய்களை கொன்றதால் பீதி
விளை நிலங்களில் சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள்.... அச்சம் : ஆடு,கன்றுக்குட்டி, நாய்களை கொன்றதால் பீதி
ADDED : நவ 22, 2025 03:23 AM

பெரியகுளம்:பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் மானை வேட்டையாடிய சிறுத்தை, தொடர்ச்சியாக ஆடுகள், கன்று குட்டிகளை வேட்டையாடி வருகிறது. நேற்று ஒரே நாளில் மூன்று நாய்களை அடித்து கொன்றது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தாமதிப்பதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
பெரியகுளம் கைலாசபட்டி மலைஅடிவாரத்தில் கோயில்காடு, அத்திமுருகு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா, தென்னை, கரும்பு, வாழை விவசாயம் நடக்கிறது. விவசாயத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் அதிகளவில் இங்கு கைலாசநாதர் மலைக்கோயில் உள்ளது. பிரதோஷம், பவுர்ணமி பூஜைகளில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்று வருகின்றனர். டிச.3ல் கார்த்திகை தீபம் விழா நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்தப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.
தோட்டங்களில் வளர்க்கப்படும் ஆடுகள், கன்றுக்குட்டி, நாய்கள் என 20 க்கும் மேற்பட்ட கால்நடைகளை கடித்து கொன்றது. கடந்த வாரம் கைலாசநாதர் கோயில் பகுதியில் மானை சிறுத்தை வேட்டையாடியது.
இச் சம்பவம் விவசாய நிலபகுதி அருகே நடந்ததால் விவசாயிகள், பக்தர்கள் அப் பகுதிக்கு செல்ல அச்சப்படுகின்றனர். கேமரா ஆதாரம் காட்டிய விவசாயிகள்: அக்., மாதம் சோத்துப்பாறை வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகள், வனத்துறை சந்திப்பு கூட்டம் நடந்தது. அதில் காட்டுமாடு, காட்டுப்பன்றி, குரங்குகளால் அறுவடைக்கு தயாராகும் விளை பொருட்கள் சேதரமாகிறது.
இதற்கெல்லாம் மேலாக தோட்டங்களில் உலா வரும் சிறுத்தை, கன்றுக்குட்டி, நாய்களை கடித்து கொன்று வருகிறது என புகார் கூறி கேமராவில் பதிவான ஆதாரங்களை விவசாயிகள் காண்பித்துள்ளனர்.
விரைவில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்போம் என வனத்துறை தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் கூண்டு கொண்டு வரவில்லை.
வனத்துறையினர் கூறுகையில்,' கோயில்காடு பகுதியில் இரு இடங்களில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய கேமரா பொருத்தியுள்ளோம். இதுவரை கேமராவில் பதிவு ஏதுமில்லை. தினமும் ரோந்து சென்று வருகிறோம்,' என்றனர்.
வனத்துறை நடவடிக்கை இல்லை
'பெரியகுளம் குழாய்தொட்டி அருகே எனது தோட்டத்தில் கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்றது. விளை நிலங்களில் சிறுத்தை ஊடுறுவியுள்ளதால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். அனைத்து புரவு விவசாயிகளும் சிறுத்தையை பிடிப்பதற்கு கோருகிறோம். ஆனால் நடவடிக்கை இல்லை,' என்றார்.
---வீரகேசவன், தலைவர்,
தென்கரை விவசாயிகள் சங்கம், பெரியகுளம்

