/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முட்புதர் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் சங்கரப்பன் கண்மாய் மழைநீரை முழுமையாக சேமிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
/
முட்புதர் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் சங்கரப்பன் கண்மாய் மழைநீரை முழுமையாக சேமிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
முட்புதர் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் சங்கரப்பன் கண்மாய் மழைநீரை முழுமையாக சேமிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
முட்புதர் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் சங்கரப்பன் கண்மாய் மழைநீரை முழுமையாக சேமிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
ADDED : ஏப் 17, 2025 05:59 AM

போடி: போடி அருகே உள்ள சங்கரப்பன் கண்மாய் தூர்வாரததால் முட்செடிகள், ஆகாய தாமரை வளர்ந்தும், தனி நபர்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் மழை நீரை முழுவதும் தேக்க முடியாத நிலையில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி மேலச்சொக்கநாதபுரத்தில் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது சங்கரப்பன் கண்மாய். குரங்கணி பகுதியில் பெய்யும் மழை நீர், கொட்டகுடி ஆறு வழியாக பங்காருசாமி கண்மாய் நிரம்பியதும் அருகே உள்ள மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன், சங்கரப்பன் கண்மாய்க்கு வந்தடைகிறது. இக்கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் மூலம் 1300 ஏக்கர் நேரடியாகவும், 400 ஏக்கர் மறைமுகமாக பயன்பெறுகின்றன. தற்போது கொட்டகுடி ஆற்றில் இருந்து கண்மாய்க்கு நீர் வரும் பாதையான அணைப்பிள்ளையார் அணை, கொட்டகுடி ஆறு, ராஜவாய்க்கால் பகுதியின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் உள்ளதால் சங்கரப்பன் கண்மாயில் தண்ணீரை முழுவதுமாக தேக்க முடியாத நிலை உள்ளது. இக்கண்மாய் தூர்வாரததால் முட்கள், ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளன. இதனால் பருவ மழை காலங்களில் தண்ணீரை கண்மாயில் முழுவதுமாக தேக்க முடிவில்லை.
முட்செடிகளை அகற்ற வேண்டும்
தங்கம், விவசாயி, மீனாட்சிபுரம் : சங்கரப்பன் கண்மாயில் தண்ணீர் முழுவதும் தேங்கி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கண்மாயை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளன. போதிய நீர் தேங்காததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து முழுமையாக சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றோம். விவசாயிகள் பயன் பெறும் வகையில் கண்மாயில் வளர்ந்துள்ள முட்கள், ஆகாயத் தாமரை செடிகளை அகற்றிட கண்மாயை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும். கொட்டகுடி ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் வீணாக வெளியேறுகிறது
கணேசன், விவசாயி, மீனாட்சிபுரம் : இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் அருகே உள்ள மீனாட்சியம்மன் கண்மாய்க்கு நீர் செல்கிறது. இதன் மூலம் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன் பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும். கண்மாயில் முட்செடிகள் வளர்ந்து இருப்பதோடு, தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலச்சொக்கநாதபுரம் மெயின் ரோட்டில் இருந்து கண்மாய் முடியும் வரை 2 கி.மீ., தூரம் ரோடு வசதி இல்லை. கண்மாய் அருகே நீர்வரத்து ஓடை தடுப்பு வசதி இல்லாததால் தண்ணீர் வீணாக வெளியேறி செல்கிறது.
கரையில் ரோடு வசதி இல்லாததால் வாகனங்கள் செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். விவசாயிகள் பயன் பெறும் வகையில் கண்மாய்க்கு நீர்வரும் வழி பாதையான ராஜ வாய்க்காலின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கண்மாய் கரையை மேம்படுத்தி, ரோடு வசதி செய்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.