/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூ பூக்காத மா மரங்களால் மகசூல் பாதிக்கும் அபாயம் விவசாயிகள் கவலை
/
பூ பூக்காத மா மரங்களால் மகசூல் பாதிக்கும் அபாயம் விவசாயிகள் கவலை
பூ பூக்காத மா மரங்களால் மகசூல் பாதிக்கும் அபாயம் விவசாயிகள் கவலை
பூ பூக்காத மா மரங்களால் மகசூல் பாதிக்கும் அபாயம் விவசாயிகள் கவலை
ADDED : பிப் 19, 2024 05:12 AM
கம்பம், : 'தொடர்ந்து மழை பெய்ததால், மா மரங்களில் பூ பூக்கவில்லை. இதனால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.' என, மா விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் வரை மா சாகுபடியாகிறது. மிக அதிகமாக பெரியகுளம், போடி, கம்பம் வட்டாரங்களில் சாகுபடியாகிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கணிசமான பரப்பு ஆற்றுப் பாசனத்தில் சாகுபடியாகிறது. இப்பயிர் பெரிய அளவில் உரம் பூச்சி மருந்துகள் செலவு செய்ய தேவையில்லை.
அதே சமயம் நல்ல வருவாய் தரக்கூடிய பயிராகும். காசா லட்டு, கல்லாமை, செந்தூரம், அல்போன்சா, கிரேப்ஸ் உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரியில் பூ பூக்கும். அறுவடை ஏப்ரலில் துவங்கி ஜுன் வரை இருக்கும்.
ஆனால் இந்தாண்டு பிப்ரவரி மூன்றாவது வாரத்தை கடந்தும் 'மா' மரங்களில் பூ எடுக்கவில்லை. இனி பூ எடுக்குமா என்பதும் தெரியவில்லை. இதனால் நடப்பாண்டில் 'மா' மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மா மட்டுமில்லாமல் கொட்டை முந்திரி மகசூலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கம்பம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியன் ராணா கூறுகையில், 'கடந்த ஜனவரி முதல் வாரம் வரை மழை பெய்ததால் 'மா' மரங்களில் பூ எடுக்கவில்லை. தற்போது கொளுந்து லேசாக தெரிகின்றன. இந்த சீசன் மாறி வருகிறது. மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கொட்டை முந்திரியிலும் இதே நிலை தான். பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.', என்றார்.

