/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்மாய்களுக்கு தண்ணீர் தராததால் பயிர்கள் கருகும் நிலை விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் புகார்
/
கண்மாய்களுக்கு தண்ணீர் தராததால் பயிர்கள் கருகும் நிலை விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் புகார்
கண்மாய்களுக்கு தண்ணீர் தராததால் பயிர்கள் கருகும் நிலை விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் புகார்
கண்மாய்களுக்கு தண்ணீர் தராததால் பயிர்கள் கருகும் நிலை விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் புகார்
ADDED : பிப் 05, 2025 07:18 AM
உத்தமபாளையம்,: உத்தமபாளையம் தாமரைக்குளம், சின்னமனூர் கருங்கட்டான்குளம் கண்மாய்களுக்கு நீர்வளத்துறையினர் தண்ணீர் வழங்க மறுப்பதால், நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் நீரின்றி கருகுவதாக கலெக்டர் ஷஜீவனாவிடம், விவசாயிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப்பெரியாறு அணை பாசனத்தில் 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது இரண்டாம் போகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு வரும் மார்ச் வரை தண்ணீர் தேவைப்படும்.
கூடலூரில் துவங்கி பழனிசெட்டிபட்டி வரை வயல்கள் உள்ளன. இதில் 17 வாய்க்கால்கள் மூலம் பாசனம் நடைபெற்றாலும், அனைத்து ஊர்களிலுமே கண்மாய்களில் நீரை தேக்கி பாசனம் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் கம்பம் வீரப்ப நாயக்கன் குளம், ஒட்டு ஒடப்படி குளங்கள், உத்தமபாளையம் தாமரைகுளம், குப்பிசெட்டி குளம், சின்னமனூர் கருங்கட்டான் குளம், உடைய குளம், செங்குளம் உள்ளது.
பி.டி.ஆர்., வாய்க்காலில் ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதை சுட்டிக்காட்டி உத்தமபாளையம் தாமரைகுளம், சின்னமனூர் கருங்கட்டான் குளம் கண்மாய்களுக்கு நீர்வளத்துறையினர் தண்ணீர் வழங்கவில்லை.
இதனால் இந்த இரண்டு கண்மாய்களின் கீழ் பாசன வசதி பெறும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் நெல் பயிர்கள் நீரின்றி வாடுகிறது.
விவசாயிகள் சங்கம் சார்பில் நீர்வளத்துறையை அணுகியபோது முறையான பதில் இல்லை. எனவே கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டரிடம், விவசாய சங்கம் புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மயில்வாகன் கூறுகையில், கடந்த 4 மாதங்களில் இரு கண்மாய்களுக்கும் மாதம் ஒரு முறை தண்ணீர் நிரப்பி உள்ளோம். இன்று மாலை மீண்டும் தண்ணீர் தர உள்ளோம் என்றார்