/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்ய விவசாய சங்கம் தீர்மானம்
/
நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்ய விவசாய சங்கம் தீர்மானம்
நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்ய விவசாய சங்கம் தீர்மானம்
நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்ய விவசாய சங்கம் தீர்மானம்
ADDED : மே 20, 2025 01:26 AM
உத்தமபாளையம்: ''வேளாண் இடு பொருள்கள் விலை, அறுவடை இயந்திர வாடகை, தொழிலாளர் கூலி பல மடங்கு உயர்ந்துள்ளதால், நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இச்சங்கத்தின் சார்பில் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விஜயராஜன் முன்னிலை வகித்தார். செயலாளர் சகுபர் அலி வரவேற்றார்.
கூட்டத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு வழக்கம் போல ஜூன் முதல் தேதி பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசுக்கு, நீர்வளத்துறை பரிந்துரைக் கடிதம் எழுத கேட்டுக் கொள்ளப்பட்டது.
வேளாண் இடுபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.
அறுவடை இயந்திரங்கள், தொழிலாளர் கூலி உயர்ந்துள்ளது. எனவே நெல்லுக்கு குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்செய், புன்செய் விவசாயிகளை ஒருங்கிணைந்து ஒரே மாதிரியான கூலி நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நாராயணன் (கம்பம்), ராஜா (சின்னமனுார்), நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் (கம்பம்), கிருஷ்ணமூர்த்தி (கூடலுார்), ஆம்ஸ்ட்ராங் (சீலையம்பட்டி) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.