sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கம்பம் பள்ளத்தாக்கில் 16 கால்வாய்கள் கண்மாய்களை துார்வார வேண்டும்; விவசாயிகள் சங்கம் கோரிக்கை

/

கம்பம் பள்ளத்தாக்கில் 16 கால்வாய்கள் கண்மாய்களை துார்வார வேண்டும்; விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கம்பம் பள்ளத்தாக்கில் 16 கால்வாய்கள் கண்மாய்களை துார்வார வேண்டும்; விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கம்பம் பள்ளத்தாக்கில் 16 கால்வாய்கள் கண்மாய்களை துார்வார வேண்டும்; விவசாயிகள் சங்கம் கோரிக்கை


ADDED : ஏப் 26, 2025 06:20 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமுத்து வாய்க்காலை தூர் வாருவது போன்ற மற்ற 16 வாய்க்கால்களையும், கண்மாய்களையும் தூர்வார நீர்வளத்துறை முன்வர வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. லோயர்கேம்பில் துவங்கி பழனிச்செட்டிபட்டி வரை வயல்கள் உள்ளன. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்ய 17 வாய்க்கால்கள், பல கண்மாய்கள் உள்ளன. இந்த வாய்க்கால்களில் மடைகள், ஷட்டர்கள், கரைகள் பழுதடைந்துள்ளது . வாய்க்கால்,கண்மாய்களை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகி விட்டது.

தற்போது உத்தமுத்து வாய்க்கால் ரூ. 11 கோடியில் தூர வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பிற வாய்க்கால்கள் மிக மோசமாக உள்ளது. எனவே உத்தமுத்து வாய்க்காலை தூர் வாருவது போன்று, மற்ற வாய்க்கால்களையும் தூர்வார நீர்வளத் துறை முன் வர வேண்டும்.

மேலும் வீரப்ப நாயக்கன் குளம், தாமரைக் குளம், குப்பி செட்டி குளம், கருங்கட்டான்குளம், செங்குளம் உள்ளிட்ட பல கண்மாய்கள் தூர்வாராமல் மண்மேடாகி வருகிறது. இதனால் தண்ணீரை தேக்கி விவசாயம் செய்வதில் சிரமங்கள் உள்ளன.

இனி தென்மேற்கு பருவ மழை பெய்யும் காலம் நெருங்கி வருகிறது. அவ்வப்போது புயல் மழை பெய்து வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்துள்ள இரண்டாம் போகம் அறுவடை முடிந்து விட்டது. அறுவடை பணிகள் முடிவிற்கு வந்துள்ளதால், காலம் தாழ்த்தாமல் நீர்வளத்துறை, 17 வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும்.

மடைகள், ஷட்டர்களை பழுது நீக்க வேண்டும். அப்போது தான் மழை வரும் போது வாய்க்கால்கள், கண்மாய்களில் உடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். தண்ணீர் பகிர்ந்தளிப்பை முறையாக மேற்கொள்ள முடியும். என்றனர்.






      Dinamalar
      Follow us