/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விலை இல்லாததால் கனகாம்பரம் சாகுபடியை தவிர்க்கும் விவசாயிகள்
/
விலை இல்லாததால் கனகாம்பரம் சாகுபடியை தவிர்க்கும் விவசாயிகள்
விலை இல்லாததால் கனகாம்பரம் சாகுபடியை தவிர்க்கும் விவசாயிகள்
விலை இல்லாததால் கனகாம்பரம் சாகுபடியை தவிர்க்கும் விவசாயிகள்
ADDED : ஏப் 25, 2025 07:09 AM
போடி: கனகாம்பரம் பூக்களுக்கு உரிய விலை இல்லாததால் இச் சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
போடி பகுதியில் ராசிங்காபுரம், சிலமலை, பெருமாள் கவுண்டன்பட்டி உட்பட சில கிராமங்களில் விவசாயிகள் கனகாம்பர பூக்கள் சாகுபடி செய்து உள்ளனர். தற்போது அதற்கான சீசன் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு வரை கனகாம்பர பூக்களுக்கு கடும் கிராக்கி இருந்ததால் கிலோ ரூ. 500 முதல் 800 வரை விற்பனையானது. தற்போது அதன் தேவை குறைந்து உள்ளதால் உரிய விலை கிடைப்பது இல்லை.
இதனால் பறிக்கப்படும் பூக்கள் கூலிக்கு கூட கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டு உள்ளது.
விவசாயிகள் கூறுகையில் : கனகாம்பரம் செடிகளை ஒருமுறை நடவு செய்து பராமரித்தால் 3 ஆண்டுகள் பலன் கிடைக்கும். அதிக வெயில் படாமல் நிழலில் வளரும் செடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. ஒரு நபர் ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிலோ வரை மட்டுமே பறிக்க முடியும். தற்போது கிலோ ரூ.150 முதல் ரூ. 200 வரை உள்ளது.
இந்த சூழலில் பறிக்கப்படும் கனகாம்பர பூக்களுக்கு லாபம் கிடைப்பது இல்லை. கூலிக்கு கூட கட்டுபடியாகாத நிலை உள்ளது. இருப்பினும் வேலை வாய்ப்புக்காக தொடர்கிறோம். ரூ.500 க்கு மேல் விலை கிடைத்தால் பயன் உள்ளதாக இருக்கும். போதிய விலை இல்லாத பலரும் கனகாம்பரம் பூக்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டுவதை தவிர்த்து வருகின்றனர்.

