/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்ற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
/
தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்ற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்ற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்ற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 26, 2025 04:25 AM
தேனி: ''தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்ற மாவட்டத்தில் 23 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.'' என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக ஆண்டிபட்டி 6, கடமலைக்குண்டு, பெரியகுளம், தேனி, போடி, சின்னமனுார் தலா 3, உத்தமபாளையத்தில் 2, கம்பத்தில் ஒரு ஊராட்சி என மொத்தம் 23 ஊராட்சிகள் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
தேர்வாகி உள்ள இந்த ஊராட்சிகளில் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் 10 முதல் 15 ஏக்கர் தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்படும். அங்கு முட்புதர்களை அகற்றி, சமன் செய்து உழுவதற்கு 2.5 ஏக்கருக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.9,600 வழங்கப்படும்.
அது தவிர பழ மரக்கன்றுகள், சாகுபடிக்கு பயிர்வகை விதைகள், உயிர் உரங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. மேலும் விபரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். விருப்ப முள்ள விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.