/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடரும் மின் மோட்டர் ஒயர் திருட்டு தடுக்க விவசாயிகள் எஸ்.பி.,யிடம் புகார்
/
தொடரும் மின் மோட்டர் ஒயர் திருட்டு தடுக்க விவசாயிகள் எஸ்.பி.,யிடம் புகார்
தொடரும் மின் மோட்டர் ஒயர் திருட்டு தடுக்க விவசாயிகள் எஸ்.பி.,யிடம் புகார்
தொடரும் மின் மோட்டர் ஒயர் திருட்டு தடுக்க விவசாயிகள் எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : மார் 31, 2025 07:12 AM

தேனி : கோவிந்தநகரம், ஸ்ரீரெங்காபுரம், வெங்கடாசலபுரம், அம்மச்சியாபுரம் கிராமங்களில் தொடர்ந்து நடைபெறும் மின்மோட்டார் ஒயர்கள் திருட்டைத்தடுக்கக்கோரி விவசாயிகள் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
தேனி ஒன்றியம், கோவிந்த நகரத்தை சேர்ந்த விவசாயி கேசவன் தோட்டத்தில் மார்ச் 24ல் மின்மோட்டார்ஒயரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனால் இவருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டது. அதேப்பகுதிசத்திரியன் மின்மோட்டார் ஒயர், வீரபாண்டி விவசாயி சிவா தோட்டத்தில் அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த 12 டன் வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதேப்பகுதி விவசாயி வேல்ராஜ் தோட்டத்தில் கடந்த ஆண்டு 2 முறை மின்மோட்டாருக்கான ஒயர் திருடுபோனது. கோவிந்தநகரம் விவசாயி விஜயகோபால் நிலத்தில் ரூ.17 ஆயிரம்மதிப்புள்ள மின்மோட்டார் ஒயர் திருடப்பட்டுள்ளது. தேனி தெற்கு ஒன்றிய பகுதிகளில் தொடர்ந்து 57 மின்மோட்டார் ஒயர்கள் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. மோட்டார்ஒயர்கள் திருடு போனதால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகின. மீண்டும் மின் இணைப்பு சரி செய்ய விவசாயிகள் பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு பாதிக்கப்பட்டனர். மின் ஓயர் திருட்டை தடுக்க கோரி வீரபாண்டி, கண்டமனுார் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தாலும் கண்டு கொள்வதில்லை. இதனால் பாதிக்கப்படுவதாகவும், மின் ஒயர் திருட்டை தடுக்க கோரி விவசாயிகள் நேற்று முன்தினம் தேனி எஸ்.பி.,சிவபிரசாத்திடம் புகார் அளித்தனர்.