/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேவதானப்பட்டி ரேஞ்சருக்கு விவசாயிகள் கண்டனம்
/
தேவதானப்பட்டி ரேஞ்சருக்கு விவசாயிகள் கண்டனம்
ADDED : நவ 20, 2025 04:18 AM
பெரியகுளம்: பெரியகுளம் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கில் நீர்வழி பாதையில் அடைபட்ட கற்களை அகற்ற அனுமதி வழங்காத தேவதானப்பட்டி ரேஞ்சர் அன்பழகனை கண்டித்து விவசாயிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
பெரியகுளம் வடகரை மேலப்புரவில் கல்லாற்றுக்கு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் தண்ணீர் வரும். இப் பகுதி தேவதானப்பட்டி வனச்சரகத்திற்குட்பட்டது. கல்லாற்று நீரினை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் பெய்த கனமழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் அடித்து வரப்பட்ட கற்கள், பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலை அடைத்தது. தண்ணீர் செல்லும் பாதை தடைபட்டது.
இதனை கடந்த வாரம் தங்கத்தமிழ் செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டனர். இவர்களிடம் விவசாயிகள் 'கற்களை அகற்றி தடையின்றி தண்ணீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும்,' என நீர்வளத்துறை, வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு வனத்துறை அனுமதி தரவில்லை.
இதனால் நீர்வளத் துறைக்கு எதிராக பெரியகுளம் மேலப்புரவு விவசாயிகள் பாதுகாப்போர் முன்னேற்ற சங்கம் மற்றும் பெரியகுளம் பகுதி விவசாயிகள், தேவதானப்பட்டி ரேஞ்சர் அன்பழகனை கண்டித்து பெரியகுளம் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

