/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் நிலத்தடி நீர் கைகொடுப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி: பருவ மழையால் இறவை பாசன விவசாயிகள் ஆர்வம்
/
ஆண்டிபட்டியில் நிலத்தடி நீர் கைகொடுப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி: பருவ மழையால் இறவை பாசன விவசாயிகள் ஆர்வம்
ஆண்டிபட்டியில் நிலத்தடி நீர் கைகொடுப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி: பருவ மழையால் இறவை பாசன விவசாயிகள் ஆர்வம்
ஆண்டிபட்டியில் நிலத்தடி நீர் கைகொடுப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி: பருவ மழையால் இறவை பாசன விவசாயிகள் ஆர்வம்
ADDED : மே 30, 2025 03:30 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீர் இருப்பு கை கொடுப்பதால் இறவை பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயத்தை தொடர்கின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. மழையை மட்டுமே நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் இருந்தாலும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆண்டு முழுவதும் விவசாயத்தை தொடர்கின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியம் அம்மச்சியாபுரம், குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, ஸ்ரீரங்கபுரம் அய்யனத்தேவன்பட்டி, புதூர், அய்யர் கோட்டம் உள்ளிட்ட பல கிராமங்கள் வைகை ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ளன. அக்., நவ.,டிசம்பரில் வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி இப் பகுதியில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்கின்றனர். மழைக்கால சாகுபடிக்குப் பின்பு கிணறு, போர்வெல் நீரைப் பயன்படுத்தி தக்காளி, வெங்காயம், வெண்டை, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் கை கொடுத்த பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள ஏத்தக்கோவில், சித்தயகவுண்டன்பட்டி, மறவபட்டி, பாலக்கோம்பை ,ராயவேலூர், தெப்பம்பட்டி, அழகாபுரி உட்பட பல கிராமங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு உள்ளன. கோடை காலம் முடிய உள்ள நிலையிலும் இப்பகுதி கிராமங்களிலும் விவசாயிகள் ஆர்வத்துடன் பணிகளை தொடர்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: விளைவிக்கப்படும் பொருட்களுக்கு விலை கிடைக்கும்போது பல விவசாயிகளும் ஒரே வகை பொருட்களை சாகுபடி செய்கின்றனர். விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்து பாதிக்கப்படுகின்றனர்.
பல்வேறு வகை பயிர்களுக்கு விவசாயிகள் முக்கியத்துவம் தருவதில்லை. கடந்த காலங்களில் பலன் தரும் நிலையில் இருந்த பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தினர். தற்போதுள்ள நிலத்தடி நீர் இருப்பு போதியளவு உள்ளதால் விவசாயிகளின் அடுத்தடுத்த சாகுபடிக்கு ஊக்கம் தருவதாக உள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் சிறு குரு விவசாயிகளை அதிகம் உள்ளனர். சீசன் காலங்களில் விளையும் பூக்கள், காய்கறிகளுக்கு அரசு மூலம் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றனர்.