/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உளுந்து, பாசிப்பயறு சாகுபடிசெய்ய விவசாயிகளிடம் ஆர்வம் குறைவு
/
உளுந்து, பாசிப்பயறு சாகுபடிசெய்ய விவசாயிகளிடம் ஆர்வம் குறைவு
உளுந்து, பாசிப்பயறு சாகுபடிசெய்ய விவசாயிகளிடம் ஆர்வம் குறைவு
உளுந்து, பாசிப்பயறு சாகுபடிசெய்ய விவசாயிகளிடம் ஆர்வம் குறைவு
ADDED : ஏப் 13, 2025 06:38 AM
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் நெல் தரிசில் உளுந்து, பாசிப்பயறு சாகுபடியை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
வேளாண் பயிர் உற்பத்தி ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி குறைந்துள்ளது. எனவே, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் உளுந்து, பாசிப் பயறு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் அறுவடைக்கு பின் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்வது வழக்கம். தற்போது இரண்டாம் போக நெல் அறுவடை முடிந்து ஏப்ரல் , மே யில் வயல்கள் தரிசாக இருக்கும்.
இந்த இரு மாதங்களில் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்தால் , விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.
மேலும் மண்ணின் வளம் அதிகரிக்கும். ஆனால் என்ன காரணத்தாலோ 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் நெல் தரிசில் பயறு சாகுபடியை கை விட்டுள்ளனர்.
வேளாண் துறை ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து மற்றும் பாசிப்பயறு விதை 50 சதவீத மானிய விலையில் வழங்குகிறது.
கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் வட்டாரங்களில் வேளாண் துறை உதவி இயக்குனர்கள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு, விவசாயிகளிடம் ஆதரவு கிடைக்கவில்லை.
இதனால் பெரும்பாலான நெல் வயல்கள் தரிசாகவே உள்ளன. சின்னமனூர் வட்டாரத்தில் குச்சனூர், சீலையம்பட்டி பகுதியில் சாகுபடி செய்துள்ளனர். கம்பம், உத்தமபாளையம் வட்டாரங்களிலும் மிக குறைவான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் 90 சவீத நிலங்கள் தரிசாகவே உள்ளன.