/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செண்டு பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
செண்டு பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : டிச 10, 2025 09:25 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி விவசாயிகள் செண்டு பூக்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, ராஜகோபாலன்பட்டி, ஏத்தக்கோவில், கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர்நரசிங்கபுரம், கொத்தப்பட்டி, ராஜதானி உட்பட பல கிராமங்களில் மல்லிகை பூக்கள் சாகுபடி உள்ளது. கார்த்திகையில் துவங்கும் சபரிமலை சீசன், அதன்பின் தைப்பொங்கல், மாசிப்பச்சை விழாக்களில் செண்டு பூக்களின் பயன்பாடு அதிகம் இருக்கும். இதனை கணக்கில் கொண்டு ஆண்டிபட்டி பகுதி விவசாயிகள் செண்டு பூக்கள் சாகுபடியை துவக்கி உள்ளனர்.
கன்னியப்பபிள்ளைபட்டி விவசாயி சின்னசாமி கூறியதாவது: நீர் செழிப்பான பகுதிகளில் செண்டு பூக்கள் அதிக பலன் கொடுக்கும். ஆண்டிபட்டி பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட செடிகளில் தற்போது பூக்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து செண்டு பூக்கள் நடவும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சீசன் காலத்தில் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு தினமும் 2 முதல் 5 டன் அளவில் செண்டு பூக்கள் வரத்து இருக்கும். தற்போது செண்டு பூக்கள் கிலோ ரூ.150 முதல் 200 வரை விலை போகிறது என்றார்.

