/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையை மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் வர வலியுறுத்தல் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு
/
பெரியாறு அணையை மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் வர வலியுறுத்தல் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு
பெரியாறு அணையை மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் வர வலியுறுத்தல் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு
பெரியாறு அணையை மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் வர வலியுறுத்தல் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு
ADDED : டிச 30, 2025 05:56 AM

தேனி: 'பெரியாறு அணையை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கு வர வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ராஜகுமார் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்ட முகாம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் கவிதா, கலால் உதவி ஆணையர் பஞ்சாபகேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு ஊராட்சி ராஜேஷ் கண்ணன் தலைமையில் கிராம இளைஞர்கள் வழங்கிய மனுவில், கிராமத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
முறையற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்றி நோய்களுக்கு ஆளாகுகின்றனர். இளைஞர்கள் சீருடை பணிகளுக்கு செல்ல பயிற்சி எடுக்கவும், விளையாட்டுகளில் மேம்படவும் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும். பஞ்சதாங்கி கண்மாயில் நீர் இல்லாத போது விளையாடி வருகிறோம். அங்கும் சிலர் இடையூறு செய்கின்றனர். விளையாட்டு மைதானம் அமைத்து தர கோரினர்.
போடியில் தனியார் நகை அடகு கடையில் அடகு வைத்து பாதிக்கப்பட்டோர் நலச்சங்க தலைவர் சந்திரா தலைமையில் பாதிக்கப்பட்டோர் வழங்கிய மனுவில், 'போடியில் தனியார் நகை அடகு கடையில் 2012ல் நகைகளை அடகு வைத்தோம்.
அந்த கடைகாரர் மற்றொரு அடகு நிறுவனத்தில் நகையை மறு அடகு வைத்து கடன் வாங்கி உள்ளார். நகையை திரும்ப பெற தேனி குற்றப்பிரிவு போலீசார் டோக்கன் வழங்கினர். ஆனால், நகையை தரவில்லை.
நீதிமன்ற வழக்கில் உள்ளதாக கூறி விசாரணையை முடித்தனர். நகையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரினர்.
அதிகாரிகள் தங்கி பணி புரிய வேண்டும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் மனோகரன் மனுவில், ''முல்லைப்பெரியாறு அணையில் தங்கி பணிபுரிய வேண்டிய அதிகாரிகள் அங்கு தங்கு வதில்லை.
பொதுப்பணித்துறை வண்டிகளை செயற் பொறியாளர், உதவி செயற்பொறியாளர் சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்துகின்றனர். எரிபொருள் செலவை அணை பொது பயன்பாட்டு நிதியில் எடுக்கின்றனர்.
செயற்பொறியாளர் கம்பத்தில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பை பயன்படுத்தும் நிலையில் அதை தன்னுடைய பெயரில் பதிவு செய்யாமல் முறைகேடாக பயன்படுத்துகிறார்.
இதனால் அரசுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.
இவரின் கெடுபிடியால் மூவர் பணியிட மாற்றம் வாங்கி சென்று விட்டதால், அணையில் எவ்வித பணியும் செய்ய முடியாத நிலை உள்ளது. அணையில் தங்கி பணிபுரிய வேண்டிய இளம் பொறியாளர் மாதத்தில் ஒன்று, இரண்டு நாள் மட்டும் அணைக்கு வருகிறார்.
இவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையை தேனி மாவட்ட நிர்வாகம் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர பரிந்துரை செய்ய கோரினர். 13 பேர் கைது திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து நாட்டுமாடு நலச்சங்க நிர்வாகி கலைவாணன் தலைமையில் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை தேனி இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

