/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் நடவுக்கு தயாராகும் விவசாயிகள்
/
நெல் நடவுக்கு தயாராகும் விவசாயிகள்
ADDED : நவ 10, 2024 06:04 AM
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி பகுதியில் இறவை பாசன கிணறுகளில் நீர் சுரப்பு தாராளமானதால் விவசாயிகள் நெல் நடவுக்கு நிலங்களை தயார் படுத்துகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரம், புதூர், அய்யணத்தேவன்பட்டி, வேகவதி ஆசிரமம், வெள்ளையத்தேவன்பட்டி, மூணாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, குண்டலப்பட்டி, புள்ளிமான்கோம்பை உட்பட பல கிராமங்கள் வைகை ஆற்றின் கரைப்பகுதியில் உள்ளன. கடந்த சில வாரங்களில் பெய்த மழையால் ஆறு, ஓடைகளின் நீர் வரத்தால் பாசனக்கிணறுகளில் நீர் சுரப்பு அதிகரித்துள்ளது.
காய்கறி சாகுபடிக்குப் பின் தற்போதுள்ள நீர் இருப்பை பயன்பத்தி விவசாயிகள் நெல் சாகுபடிக்கு திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே விதைப்பு செய்யப்பட்ட பசுந்தாள் உரச்செடிகள் தற்போதுவளர்ந்துள்ளன.
வளர்ந்த செடிகளில் நீர் விட்டு மண்ணில் உரமாக மக்குவதற்கு தொழி அடிக்கும் பணிகளில்உள்ளனர்.
சில விவசாயிகள் நிலங்களில் நெல் விதைப்பை நேரடியாகவும், சிலர் நாற்று வளர்ப்புக்கும் நிலங்களை தயார் படுத்தி வருகின்றனர்.