ADDED : ஜன 24, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் வைகை ஆற்று பாலம் அருகே விவசாய நிலத்தில் கிரஷர் அமைக்க வெடிவைத்ததை அலைபேசியில் படம் எடுத்த விவசாயி லெட்சுமணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், விவசாயிகள், பெண்கள் 63 பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்தினர். மாநில குழு உறுப்பினர் ராஜப்பன், கிராமத்தினர், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

