/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இலவம்பஞ்சு விலையை குறைத்து கொள்முதல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
இலவம்பஞ்சு விலையை குறைத்து கொள்முதல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இலவம்பஞ்சு விலையை குறைத்து கொள்முதல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இலவம்பஞ்சு விலையை குறைத்து கொள்முதல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 04, 2025 05:43 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆண்டிபட்டி தாலுகா, தும்மக்குண்டு ஊராட்சி வாலிப்பாறை உள்ளிட்ட கிராம விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பின் விவசாயிகள் ராஜா, மருதுபாண்டி, விவசாயிகள் சங்க நிர்வாகி கண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவில், 'கடமலை மயிலாடும்பாறை ஒன்றியத்தில் இலவம் பஞ்சு அதிகளவில் சாகுடி செய்துள்ளோம். கடந்தாண்டு இலவம் பஞ்சு கிலோ ரூ.120க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.38 க்கு கொள்முதல் செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். இலவம் பஞ்சுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திடவும், கதர்வாரியம் மூலம் அரசு நேரடி கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரினர்.