/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேக்கடி 'கார் பார்க்கிங்'கை அகற்ற கோரி லோயர்கேம்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் -விஸ்வரூபம் எடுக்கிறது முல்லைப் பெரியாறு பிரச்னை
/
தேக்கடி 'கார் பார்க்கிங்'கை அகற்ற கோரி லோயர்கேம்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் -விஸ்வரூபம் எடுக்கிறது முல்லைப் பெரியாறு பிரச்னை
தேக்கடி 'கார் பார்க்கிங்'கை அகற்ற கோரி லோயர்கேம்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் -விஸ்வரூபம் எடுக்கிறது முல்லைப் பெரியாறு பிரச்னை
தேக்கடி 'கார் பார்க்கிங்'கை அகற்ற கோரி லோயர்கேம்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் -விஸ்வரூபம் எடுக்கிறது முல்லைப் பெரியாறு பிரச்னை
ADDED : டிச 02, 2024 04:21 AM

கூடலுார்: முல்லைப்பெரியாறு அணை நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள ஆனவச்சாலில் செயல்பட்டு வரும் 'கார் பார்க்கிங்'கை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் எல்லைப் பகுதியான குமுளி லோயர்கேம்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. அணை நீரை நம்பி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டத்தை கேரளா 1979ல் பலவீனமடைந்து விட்டது எனக்கூறி 136 அடியாக நிலை நிறுத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மற்றும் விவசாயிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2014ல் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக்கி கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், பேபி அணையை பலப்படுத்துவதற்கு கேரள அரசு பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி முட்டுக்கட்டை போட்ட வண்ணம் உள்ளது. இதனால் 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனவச்சால் 'கார் பார்க்கிங்' மூலம் சீண்டும் கேரளா
கேரளாவில் தொடர்ந்து அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அக்.1ல் முதல் முல்லைப் பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதவிர 2022ல் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜோசப் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அடுத்த 12 மாதங்களுக்குள் முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கேரளாவில் நடந்துவரும் இப்பிரச்னையால் அணை உரிமை தமிழகத்தை விட்டு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அணை நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள ஆனவச்சால் கார் பார்க்கிங் விவகாரம் தற்போது சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
சீறும் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கார் பார்க்கிங்கை உடனடியாக அகற்ற வலியுறுத்தி நேற்று பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் குமுளி லோயர்கேம்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத் தலைவர் பொன்காட்சிக் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், கவுரவத் தலைவர் சலேத்து, பாரதீய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி, தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் தலைவர் சங்கிலி, அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.