ADDED : ஜன 10, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டா நிலங்களில் விவசாயிகள் குடும்பத்துடன் தங்கி ஏல விவசாயம் செய்து வருகின்றனர். நிலங்களை பார்வையிட வந்த போடி ஸ்பைசஸ் போர்டுஅலுவலர்கள் மஞ்சனுாத்து செக்போஸ்டில் வனத்துறையிால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதிகாரிகள் ஏல விவசாயம் நடக்கும் பகுதியை பார்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா, ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பக துண இயக்குனர் ஆனந்த் ஆகியோரிடம் மனுக்கள் வழங்கினர். கிராம தலைவர் பாண்டியன், வனக்குழு தலைவர் காசிராஜன், சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பங்கேற்றனர்.

