/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளைநிலங்களில் இயற்கையாக வன விலங்கு இறந்தால் விவசாயிகளை கைது செய்ய கூடாது சட்டசபை மதிப்பீட்டு குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : பிப் 20, 2025 06:00 AM

தேனி: விளை நிலங்களில் இயற்கையாக வன விலங்கு இறந்து கிடந்தால் விவசாயிகளை கைது செய்ய கூடாது எனசட்டசபை மதிப்பீட்டு குழுவில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை சட்டசபை மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு செய்தது.
வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையிலான சட்டசபை மதிப்பீட்டுக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.,க்களான ஓ.எஸ். மணியன்(வேதாரண்யம்), கருமாணிக்கம்(திருவாடணை), ராமசந்திரன்(ஆரணி), பன்னீர்செல்வம்(சீர்காழி), வெங்கடேஷ்வரன்(தர்மபுரி) முதன்மைச் செயலாளர் சீனிவாசன் நேற்று காலை தேனியில் ஆய்வுப்பணிகளை துவங்கினர்.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலை வகித்தார். தேனி-மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் மேம்பால பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து சர்வீஸ் ரோடு பணிகளை விரைவாக முடித்து பின்னர் மேம்பால பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
ஆய்வில் தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியகுளத்தில் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு பின் வீரபாண்டியில் அறநிலைத்துறை சார்பில் நடந்து வரும் பணிகள், கால்நடை மருத்துக்கல்லுாரியில் ஆய்வு செய்தனர்.
பெரியகுளம் கீழவடகரை கரட்டூரில் சட்டசபை மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் விவசாயிகள் கலந்துரையாடல் செய்தனர். அப்போது தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன், 'பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியை பல்கலைக் கழகமாக தரம் உயர்த்த வேண்டும். வைகை அணையை தூர் வார மதிப்பீடுகள் செய்த நிலையில் பணி துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
மணிகார்த்திக்,பெரியகுளம்,' பெரியகுளம் வனப்பகுதிகளில் காட்டுமாடு, காட்டுப்பன்றி, குரங்கு விளை பொருட்களை சேதப்படுத்துகிறது. இவைகளை வனப்பகுதியில் அனுப்பவேண்டும். சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் பட்டா நிலத்தில் இயற்கையாக இறந்து கிடந்தால், கைது செய்வதை நிறுத்த வேண்டும்'. காந்திராஜன்,' முதல்வர் ஸ்டாலின் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்'. தங்கத்தமிழ் செல்வன் எம்.பி: லோக்சபாவில் பேசுவதாக கூறினார்.
இக் குழுவில் மொத்தம் 15 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள நிலையில் நேற்று குழு தலைவர் உள்பட 8 பேர் மட்டுமே ஆய்வில் பங்கேற்றனர்.