/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தோட்டங்களுக்கு செல்ல பாதை இன்றி விவசாயிகள் தவிப்பு
/
தோட்டங்களுக்கு செல்ல பாதை இன்றி விவசாயிகள் தவிப்பு
தோட்டங்களுக்கு செல்ல பாதை இன்றி விவசாயிகள் தவிப்பு
தோட்டங்களுக்கு செல்ல பாதை இன்றி விவசாயிகள் தவிப்பு
ADDED : அக் 19, 2024 11:38 PM
உத்தமபாளையம் : உத்தமபாளையத்திற்கு மேற்கு பகுதி தோட்டங்களுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
உத்தமபாளையம் ஆர். டி.ஓ., அலுவலகத்திற்கு மேற்கு பகுதி மலையடிவாரத்தில் வாழை, தென்னை, திராட்சை உள்ளிட்ட பல வித பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தோட்டங்களுக்கு ஆர்.டி.ஒ. அலுவலகத்திற்கு மேற்கு பக்கம் பாதை உள்ளது. அங்குள்ள மயானத்திற்கு அடுத்து செல்லும் போது பாதையை இருபக்கமும் நிலம் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அருகில் உள்ள தனியார் நிலங்களின் வழியே விவசாயிகள் சென்று வந்தனர். தற்போது அந்த நிலத்தின் உரிமையாளர் பாதையை அடைத்து விட்டார்.
ஆக்கிரமிப்பு பாதை கோம்பை மேற்கு வி. ஏ. ஒ ., கட்டுப்பாட்டில் வருகிறது. இதனால் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் - தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சாகுபடியான வேளாண் விளை பொருள்களை கொண்டு வரவும் முடியவில்லை.
இது தொடர்பாக பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. நேற்று முன்தினம் சின்னமனூரில் கலக்டர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் நவீன்குமார், ராமசாமி, ராஜேந்திரன் தலைமையில் மனு அளித்து ஆக்கிரமிப்புக்களை அகற்ற வருவாய்த்துறை முன் வர வேண்டும் என்றனர்.