/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குச்சனுார் பேரூராட்சி ராஜவாய்க்கால் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
குச்சனுார் பேரூராட்சி ராஜவாய்க்கால் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
குச்சனுார் பேரூராட்சி ராஜவாய்க்கால் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
குச்சனுார் பேரூராட்சி ராஜவாய்க்கால் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 23, 2025 04:14 AM

சின்னமனூர்: கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 17 வாய்க்கால்கள் உள்ளன. இதில் மதகு இல்லாத வாய்க்கால் என்பது குச்சனூர் இராஜவாய்க்கால்.
இங்குள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலிற்கென பிரத்யேகமாக இந்த வாய்க்காலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த வாய்க்கால் மூலம் 750 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது.
அக். 17 ல் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் இராஜவாய்க்காலை சேதப்படுத்தியது.
வெள்ள நீரால் வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு 250 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இந்த வாய்க்கால் பேரூராட்சிக்கு உட்பட்டதாகும். பேரூராட்சி உடைப்பை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதில் கால தாமதம் செய்வதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
பேரூராட்சி தலைவர் ரவி கூறுகையில், ''மண் அள்ளும் இயந்திரம் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது.
தீபாவளி பண்டிகையால் ஆட்களை அழைப்பதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
விவசாயிகள் கூறுகையில், ''வெள்ள நீர் தொடர்ந்து நெல் வயல்களுக்குள் செல்வதால், கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்'' என்கின்றனர்.