/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மார் 01, 2024 12:16 AM
கூடலுார் : கூடலுாரில் நெல் அறுவடை துவங்க உள்ள நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முல்லைப் பெரியாற்றின் தலைமதகு பகுதியான கூடலுாரில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன.
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு நிரந்தர கட்டட வசதியின்றி இதுவரை வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. மழைக்காலத்தில் நெல் மூடைகளை பாதுகாக்க முடியாமல் நனைந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
அரசுக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்து நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கூடலுாரில் நெல் அறுவடை துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக துவக்குவதற்கான நடவடிக்கையை நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

