/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கத்தரிக்காய் விலை குறைவு விவசாயிகள் கவலை
/
கத்தரிக்காய் விலை குறைவு விவசாயிகள் கவலை
ADDED : பிப் 02, 2025 04:03 AM
கூடலுார் : கத்தரிக்காய் விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுார் கல்லுடைச்சான் பாறை, கழுதை மேடு, பெருமாள் கோயில், பளியன்குடி, லோயர்கேம்ப், கப்பாமடை உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செப்., அக்.ல் நடவு செய்யப்படும். தொடர்ந்து 6 மாதம் நீண்ட நாள் சாகுபடியாக இப்பயிர் உள்ளது. கடந்த சில நாட்களாக கத்தரிக்காய் விலை மிக குறைவாக இருப்பதால் செய்த செலவு கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்பினர்.
விவசாயிகள் கூறும் போது: கத்தரிக்காய் விவசாயிகளிடமிருந்து கிலோவுக்கு ரூ.12 முதல் 20 வரை வியாபாரிகள் வாங்குகின்றனர். அறுவடை செய்யப்படும் கத்தரிக்காய் சின்னமனுார், மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்புகின்றோம். அங்கு விலை மிகக் குறைவாகவே உள்ளது. ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது.
ஆனால் இதில் பாதித்தொகை மருந்து தெளிப்பதற்கு சரியாகி விடுகிறது. மீதமுள்ள தொகையில் விவசாய பராமரிப்பு, தொழிலாளர்கள் சம்பளம், வாகனக் கூலி ஆகிய செலவுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. குறைந்தது ரூ.30 முதல் 50 வரை விற்பனையானால் மட்டுமே விவசாயிகளுக்கு பற்றாக்குறையின்றி வருவாய் கிடைக்கும். தற்போது செலவைவிட வருவாய் குறைந்ததால் இருக்கின்ற செடிகளை உழுது அகற்ற முடிவு செய்துள்ளோம், என்றனர்.