/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெங்காயம் விளைச்சல் இருந்தும் விலை இன்றி விவசாயிகள் கவலை
/
வெங்காயம் விளைச்சல் இருந்தும் விலை இன்றி விவசாயிகள் கவலை
வெங்காயம் விளைச்சல் இருந்தும் விலை இன்றி விவசாயிகள் கவலை
வெங்காயம் விளைச்சல் இருந்தும் விலை இன்றி விவசாயிகள் கவலை
ADDED : ஆக 13, 2025 02:21 AM

போடி: தேனி மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மாவட்டத்தில் போடி, விசுவாசபுரம், பத்திரகாளிபுரம், காமராஜபுரம், உப்புக்கோட்டை, பாலாபட்டி, தேவாரம், லட்சுமிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. வெங்காயம் நடவு செய்த 60 நாட்களில் மகசூல் பெறலாம். இங்கு விளைந்த வெங்காயம் மதுரை, திருச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.
கடந்த ஆண்டு வெங்காயம் கிலோ ரூ.45 முதல் 50 வரை இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ. 50 முதல் ரூ.60 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
தற்போது மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சல் அதிகரித்தும் போதிய விலை இன்றி கிலோ ரூ.13 முதல் ரூ.15 வரை வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றை தரம் பிரித்து, சில்லரையில் கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ' தற்போது, விளைச்சல் அதிகரித்த நிலையில் கிலோ ரூ.13 முதல் ரூ.15 வரை வியாபாரிகள் விவசாயிகளிடம் விலைக்கு வாங்குகின்றனர்.
அவற்றை தரம் பிரித்து சில்லறையில் கிலோ ரூ.30 முதல் 35 வரை விற்பனை செய்கின்றனர். நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலை இன்றி விதைப்பு, களையெடுப்பு தண்ணீர் பாய்ச்சுதல், எடுப்பு கூலிக்கு கூட கட்டுபடியாக நிலையில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றோம்,' என்றனர்.