/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செண்டு பூக்களுக்கு விலை இன்றி விவசாயிகள் கவலை
/
செண்டு பூக்களுக்கு விலை இன்றி விவசாயிகள் கவலை
ADDED : செப் 10, 2025 02:21 AM

போடி : போடி பகுதியில் செண்டு பூக்கள் விளைச்சல் இருந்தும் போதிய விலை இன்றி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
போடி அருகே ராசிங்காபுரம், பொட்டிப்புரம், எரணம்பட்டி, மறவபட்டி, மீனாட்சிபுரம், உப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் மஞ்சள் செண்டு பூக்கள் அதிகளவில் பயிரிட்டு உள்ளனர். செண்டு பூக்களுக்கு அதிக அளவில் பனிப்பொழிவு விழுந்தால் பூக்கள் கருகி விடும். பனிப் பொழிவு இல்லாத காலங்களில் நன்கு விளைச்சல் இருக்கும். இப்பூக்கள் மாலை கட்டுவதற்கு பயன் படுகின்றன. கடந்த ஆண்டு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை இருந்தது.
இந்த ஆண்டு செண்டு பூக்கள் நல்ல விளைச்சல் உள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை வரை கிலோ
ரூ.40 முதல் 50 வரை விலை இருந்தது. மூன்று நாட்களாக ரூ.20 முதல் 25 ஆக விலை குறைந்து உள்ளது. விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில்,'செண்டு பூக்கள் விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லை. விதைப்பு, மருந்தடிப்பு, பூக்கள் எடுப்பு கூலிக்கு கூட கட்டுபடியாகாத நிலை ஏற்பட்டு உள்ளது,' என்றனர்.