/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழைப்பழ விலையை உயர்த்த கோரி ஆந்திர முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்
/
வாழைப்பழ விலையை உயர்த்த கோரி ஆந்திர முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்
வாழைப்பழ விலையை உயர்த்த கோரி ஆந்திர முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்
வாழைப்பழ விலையை உயர்த்த கோரி ஆந்திர முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்
ADDED : அக் 10, 2025 03:30 AM

கூடலுார்: ஆந்திராவில் பச்சை வாழைப்பழத்தின் விலையை உயர்த்த வலியுறுத்தி தேனி மாவட்ட விவசாயிகள் ஆந்திர முதல்வருக்கு பதிவுத் தபால் அனுப்பினர்.
தேனி மாவட்டத்தில் ஜி9 எனும் பச்சை வாழை பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை நம்பி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.6க்கு வியாபாரிகள் வாங்குவதால் ஏக்கருக்கு ரூபாய் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்கி வந்து தேனி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதால் இங்கு விளையும் பச்சை வாழை விலை குறைந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் விலை அதிகரிப்பதற்கான நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று கூடலுாரில் உள்ள வாழை விவசாயிகள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் பதிவுத் தபால் அனுப்பினர்.
அந்த தபாலில் கூறியிருப்பதாவது: 'தேனி மாவட்டத்தில் விளையும் பச்சை வாழைப்பழத்திற்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டது.
இதற்கு காரணம் மிகக் குறைந்த விலையில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுவது ஆகும். அதனால் ஆந்திராவில் வாழைப்பழ விலையை உயர்த்தினால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்பதால் விலையை உயர்த்த ஆவண செய்ய வேண்டும்', எனக் கூறப்பட்டுள்ளது.