/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடியிருப்பு பகுதியில் நடமாடும் காட்டு மாடு
/
குடியிருப்பு பகுதியில் நடமாடும் காட்டு மாடு
ADDED : அக் 10, 2025 03:30 AM

மூணாறு:குடியிருப்பு பகுதியில் காட்டு மாடு நிரந்தரமாக நடமாடுவதால் வீடுகளை விட்டு வெளியில் வர தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
மூணாறு பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காட்டு யானைகள் சுற்றித் திரியும் நிலையில், அதற்கு ஏற்ப காட்டு மாடுகளும் நடமாடி வருகின்றன.
குறிப்பாக மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட், ஐ.டி.டி. டிவிஷனில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் காட்டு மாடுகள் நிரந்தரமாக நடமாடி வருகின்றன.
அவை காலை வேலையில் நடமாடுவதால் பணிக்கு செல்லவும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் இயலாமல் தொழிலாளர்கள் திண்டாடும் நிலையில், சில நேரங்களில் வீடுகளை விட்டு வெளியில் வர அஞ்சுகின்றனர்.
ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக குடியிருப்பு பகுதியில் நடமாடும் காட்டு மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.