/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளின் நடத்தையில் ஆத்திரம் கொலை செய்த தந்தை கைது
/
மகளின் நடத்தையில் ஆத்திரம் கொலை செய்த தந்தை கைது
ADDED : செப் 25, 2025 04:47 AM

போடி சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் தங்கையா 55. இவரது மகள் பிரவீனா 29,வின் நடத்தை சரியில்லாததால் ஆத்திரம் அடைந்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கொலையான பிரவீனா திருமணம் ஆகி முதல் கணவரை விட்டு பிரிந்து போடி அருகே முந்தல் காலனியில் வசிக்கும் மாசுக்காளை 37, என்ற கூலித்தொழிலாளியை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். கணவர், குழந்தைகளுடன் முந்தலில் வசித்த நிலையில் நேற்று முன் தினம் போடி பங்காசாமி கண்மாய் அருகே கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
வி.ஏ.ஓ., விஜயலட்சுமி புகாரில், போடி தாலுகா போலீசார் இறந்த பிரவீனாவின் சடலத்தை மீட்டு போடி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பரிசோதனையில் பிரவீனா கழுத்து நெரித்து கொலை செய்தது தெரிந்தது.
இது சம்பந்தமாக பிரவீனாவின் தந்தை தங்கையாவிடம் போலீசார் விசாரணையில், 'பிரவீனா ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது தெரிந்தது. இது சம்பந்தமாக மகளை பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த தந்தை நேற்று முன்தினம் மகள் பிரவீனாவிற்கு விஷம் கொடுத்துள்ளார்.
மயங்கிய நிலையில் இறக்காதால் போடி பங்காருசாமி கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளாத தெரிவித்துள்ளார். போடி தாலுகா போலீசார் தங்கையாவை கைது செய்தனர்.