/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதியவரை கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள்
/
முதியவரை கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள்
ADDED : செப் 25, 2025 04:47 AM

தேனி : ஆண்டிபட்டி தாலுகா, வருஷநாடு அருகே கீழபூசனுாத்து ரேஷன் கடையில் துாங்கிய முதியவர் லட்சுமணன் 72, தலையில் கல்லை போட்டு கொலை செய்த கீழப்பூசனுாத்து கூலித்தொழிலாளிசதிஷ்குமார் 35,க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கீழபூசனுாத்து அடைக்கலம் மனைவி சின்னப்பொன்னு. இவரது தந்தை லட்சுமணன் 72, மருமகன் வீட்டில் தங்கி, மகள் பராமரிப்பில் வாழ்ந்தார். இவர் கீழபூசனுாத்தில் உள்ள ரேஷன்கடை வராண்டாவில்இரவில் துாங்குவது வழக்கம். அந்த ரேஷன்கடைக்கு எதிரே கூலித்தொழி சதீஷ்குமார் தனது தாயுடன் வசித்தார். சதிஷ்குமாருக்கு முதியவர் ரேஷன் கடையில் துாங்குவது பிடிக்கவில்லை. இதனால் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் 2023 செப். 6ல் மழை பெய்ததால், மருமகன் வீட்டின்திண்ணையில் துாங்கிக் கொண்டிருந்த முதியவர் லட்சுமணன், ரேஷன் கடை வராண்டாவில் துாங்கச் செல்கிறேன் என மகளிடம் கூறி சென்றார். அங்கு வந்தசதீஷ்குமார், முதியவரை மிரட்டியுள்ளார். அப்போது போர்வை கொடுக்கச் சென்ற மகள் சின்னப்பொன்னு, மழை பெய்வதால் இன்று ஒரு நாள் மட்டும் துாங்கிக்கொள்ளட்டும்,' என கூறி சென்றார். மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு சதீஷ்குமார் அருகில் இருந்த கருங்கல்லை எடுத்து, துாங்கிக் கொண்டிருந்த முதியவரின் உடலில் ஏறி அமர்ந்து, தலையில் தாக்கியும், தலையை தரையில் மோதி கொலை செய்து தப்பினார். வருஷநாடு இன்ஸ்பெக்டர் சரவணன்,சதீஷ்குமாரை கைது செய்தார்.
இந்த வழக்கு தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன், தொழிலாளி சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்த தீர்ப்பளித்தார்.
அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார்.