/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதையில் வந்த மகனை கொலை செய்த தந்தை கைது
/
போதையில் வந்த மகனை கொலை செய்த தந்தை கைது
ADDED : செப் 20, 2024 11:47 PM

போடி,:தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 61. இவரது மகன்கள் சுரேஷ்குமார், 32. சுகுமார், 31. சுரேஷ்குமார் திருமணமாகி குடும்பத்துடன் ராசிங்காபுரத்தில் வசிக்கிறார். சுகுமார் பி.இ., படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவர், தந்தையிடம் சொத்தில் பங்கு கேட்டு குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்தார்.
நேற்று முன்தினம், அவரது பாட்டி ராஜம்மாள் மீது சிறுநீர் கழித்து தகராறு செய்தார். பின் தந்தையிடம் சொத்தில் பங்கு கேட்டு, நேற்று காலை கத்தியுடன் தகராறு செய்தார். இருவருக்கும் இடையே வீட்டிற்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சுகுமார் வைத்திருந்த கத்தியை கீழே தவறவிட்டார். ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, கத்தியை எடுத்து சுகுமாரின் கழுத்து, மார்பு பகுதியில் குத்தியதில் சம்பவ இடத்திலே இறந்தார்.
அண்ணன் சுரேஷ்குமார் புகாரில், போடி தாலுாகா போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.