/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளின் திருமணம் நிறுத்தம் கண்டித்த தந்தை மீது தாக்குதல்
/
மகளின் திருமணம் நிறுத்தம் கண்டித்த தந்தை மீது தாக்குதல்
மகளின் திருமணம் நிறுத்தம் கண்டித்த தந்தை மீது தாக்குதல்
மகளின் திருமணம் நிறுத்தம் கண்டித்த தந்தை மீது தாக்குதல்
ADDED : ஏப் 16, 2025 07:55 AM
சின்னமனூர் : சின்னமனூர் அருகே உள்ள எஸ். அழகாபுரியை சேர்ந்தவர் ராஜு 60, இவரது மகள் எப்சீபா என்பவருக்கும், சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதே ஊரை சேர்ந்த முனியாண்டி 50, மணிகண்டன் 27 ஆகியோர் மணமகன் வீட்டாரிடம் சொல்லி கொடுத்து திருமணத்தை நிறுத்தியதாக ராஜூ கருதினார். இதனால் ஆத்திரமடைந்த ராஜு, இருவரிடமும் என் மகளின் வாழ்க்கையை ஏன் கெடுத்தீர்கள் என சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கட்டையால் ராஜுவை தாக்கினர். இதில் ராஜுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து முனியாண்டி மற்றும் மணிகண்டனை கைது செய்தனர்.