/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகள், பேத்திகள் மாயம்: தந்தை புகார்
/
மகள், பேத்திகள் மாயம்: தந்தை புகார்
ADDED : ஜன 11, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் முத்துமணி.
இவரது மகள் மகாலட்சுமிக்கும் 25. மதுரை மாவட்டம், விளாச்சேரி வெங்கடேஷ் கிருஷ்ணனுக்கும் 29. ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு மோகனபிரியா 5, அனுபிரியா 3, இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன் வெங்கடேஷ் கிருஷ்ணன் மாரடைப்பால் இறந்தார். மகள், பேத்திகளை முத்துமணி மேல்மங்கலத்தில் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். மாடுகளுக்கு தீவனம் சேகரிக்க சென்று வீடு திரும்பியபோது வீட்டில் மகள், பேத்திகள் காணவில்லை.
முத்துமணி புகாரில் ஜெயமங்கலம் போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.-