/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் மீது லாரி மோதி தந்தை, மகன் காயம்
/
டூவீலர் மீது லாரி மோதி தந்தை, மகன் காயம்
ADDED : அக் 16, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அருண்பாண்டி 32. இவரது மகன் மதனகோபால் 3. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நிலக்கோட்டைக்கு 'மந்திரிப்பதற்கு' டூவீலரில் தந்தை, மகன் சென்றனர்.
தேவதானப்பட்டி வத்தலக்குண்டு ரோடு அட்டணம்பட்டி பிரிவு பைபாஸ் ரோட்டில் சென்றனர்.
பின்னால் வந்த கேரளா மாநில பதிவெண் 'கேஎல். 06 எல் 4343' லாரி மோதியதில் தந்தை, மகன் காயமடைந்தனர்.
இருவரும் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்தி தப்பிய லாரி டிரைவரை தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.