/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க வலியுறுத்தல்
/
கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க வலியுறுத்தல்
கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க வலியுறுத்தல்
கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க வலியுறுத்தல்
ADDED : அக் 16, 2025 04:49 AM
கூடலுார்: கூடலூரில் நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க, நீரினை பயன்படுத்துவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கூடலுாரில் 2600 ஏக்கருக்கும் மேல் முல்லைப் பெரியாறு பாசனத்தில் வெட்டுக்காடு, காஞ்சிமரத்துறை, கப்பா மடை, ஒழுகுபுளி, தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருபோக நெல் சாகுபடி உள்ளது. தற்போது முதல் போகத்திற்கான நெல் அறுவடை வெட்டுக்காடு பகுதியில் துவங்கியுள்ளது. அக்.20க்குப் பின் அறுவடை மற்ற பகுதிகளில் தீவிரமடையும் நிலை உள்ளது.
அதனால் விவசாயிகள் பயன் பெறும் வகையில் சேமிப்புக் கிடங்கு வசதியுள்ள மேலக்கூடலுார் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கட்டடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக துவக்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கையை நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இதற்கான கோரிக்கை மனுவை தேனி கலெக்டரிடம் வழங்கியுள்ளனர்.