/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாலியல் குற்றத்தடுப்பு விழிப்புணர்வில் ஆர்வம் காட்டாத மகளிர் போலீசார்

ADDED : ஜூலை 11, 2025 03:09 AM
கம்பம்: குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம், முகாம்களை நடத்துவதில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகளில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறத்தல்களை தடுப்பதற்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை அந்தந்த பள்ளிகளின் நிர்வாகங்களுடன் இணைந்து நடத்த மகளிர் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமை எப்படி நடத்துவது என்று உத்தமபாளையத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்தாண்டு பயிற்சி வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 3 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. சட்டங்கள் பற்றி அந்த முகாம்களில் விளக்க வேண்டும். அனைத்து மகளிர் போலீசார் விழிப்புணர்வுமுகாம் நடத்துவதில் போதிய ஆர்வம் இல்லை. போக்சோ வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அனைத்து மகளிர் போலீசார் பாலியல் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும்.