நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் தாழும்கண்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாளூ 33. இவருக்கு திருமணம் முடிந்து கணவர், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டில் கிடந்தார்.
அவரை பாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
குடும்ப தகராறு காரணமாக மாளூ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. புகாரில் மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

