ADDED : ஆக 15, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த எரதிமக்காள்பட்டியை சேர்ந்த மாணவி மதுமித்ரா, ரோசனப்பட்டியைச் சேர்ந்த மாணவி மோகனப்பிரியா ஆகியோர் நீட் தேர்வு எழுதி அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு தேர்வாகி உள்ளனர்.
மருத்துவ படிப்புக்கு தேர்வு பெற்ற மாணவிகளை அவர்களின் வீட்டிற்கு சென்று பாராட்டிய ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் இரு மாணவிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் படிப்பு உதவி தொகையாக வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.