/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிதி நிறுவனம் நோட்டீஸ் விவசாயி தற்கொலை
/
நிதி நிறுவனம் நோட்டீஸ் விவசாயி தற்கொலை
ADDED : ஏப் 24, 2025 03:05 AM
தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி விவசாயி பன்னீர் செல்வம் 27, தனியார் நிதி நிறுவனம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் மன வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சில்வார்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். வீடு கட்டுவதற்கு வத்தலக்குண்டு 'பைவ் ஸ்டார்' தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடன் பெற்றார். 3 மாதமாக குடும்ப சூழ்நிலை காரணமாக தவணை தொகை செலுத்த முடியவில்லை.
இதனால் எ.புதுப்பட்டியைச் சேர்ந்த நிதி நிறுவன பணியாளர் பிரவீன் 23, பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு வந்து வீட்டில் கடன் விபரம் குறித்து நோட்டீஸ் ஒட்டினார். இதனால் மன உளைச்சலில் பன்னீர்செல்வம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன், பிரவீன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

