/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடைகள் சினை பிடிப்பது குறைவிற்கு காரணம் கண்டுபிடிப்பு; சரிவிகித உணவு வழங்காததால் பால் உற்பத்தி குறைவு

ADDED : ஜன 28, 2024 05:08 AM
கால்நடைகளில் பசுக்கள், எருமைகளில் சினைபிடிப்பது குறைந்து மலட்டுத் தன்மை அதிகரித்து வருகிறது.
இதனால் பால் உற்பத்தி தேவைக்கேற்ப இல்லாமல் சரிவை சந்திக்க துவங்கி உள்ளது. தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியான தேனி மாவட்டத்தில் 40 சதவீத அளவிற்கு பால் உற்பத்தி குறைந்தது. தினமும் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த தேனி ஆவின் 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்வதற்கே திண்டாடி வருகின்றன. இதே நிலையில் தனியார் பால் நிறுவனங்களும் தட்டுப்பாட்டில் தவிக்கிறது.
இதை தடுக்க தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை அதிகரிக்க மாடு வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வட்டாரத்திற்கு 20 சிறப்பு முகாம்கள் நடத்தி மலடு நீக்க சிகிச்சை, சினை ஊசி போடுதல் உள்ளிட்ட அனைத்து வகையான கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் சிறப்பு முகாம்கள் நடத்த கடந்த ஜூலையில் உத்தரவிடப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களிலும் 160 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, தற்போது முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கம்பம் அருகே உள்ள ஊத்துக்காட்டில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்கள் மூலம் சினை பிடிப்பது குறைந்ததற்கான காரணத்தை கால்நடை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக கால்நடை டாக்டர்கள் கூறுகையில், சரிவிகித உணவு கிடைக்காததே மாடுகளுக்கு சினை பிடிக்கும் சதவீதம் குறைந்ததற்கான காரணமாகும்.
15 லிட்டர் பால் தரும் பசுவிற்கு அதற்குரிய சரிவிகித உணவை வழங்காவிட்டால் பால் உற்பத்தி குறைந்து 10 லிட்டர் பால் தரும். பால் உற்பத்தி குறையும் போது, தானாகவே சினை பிடிப்பதும் குறையும். இது தொடர்பாக ஏற்பட்டுள்ள குறைபாடு விபரங்களை அரசிற்கு தெரிவித்துள்ளோம். சரிவிகித உணவு சப்ளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தால், இந்த பிரச்னை வராது.
பால் தட்டுப்பாடு நீங்கும் என்கின்றனர்.