/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
/
பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
ADDED : நவ 29, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட், பங்களாமேடு உள்ளிட்ட பகுதிகளில் நகர்நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார அலுவலர் ஜெயராமன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
இப்பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்ததில் 7 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்படுத்தியது தெரிந்தது.
இந்த கடைகளில் இருந்து 12 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் ஜெயசந்திரன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.